அன்புடையீர்,

அனைவருக்கும் என் மனமார்ந்த நன்றிகளும் பண்டிகை திருநாள் வாழ்த்துக்களும்.  இந்த வாரம் முழுவதும் நாம் பண்டிகை கொண்டாட்டங்களில் இருப்பதால் ஒவ்வொரு நாளும் பல சிறப்பு அம்சங்கள் நம் வாழ்வில் நிகழக்கூடும் அவை சிறந்த எதிர் காலத்திற்கான ஒரு வழித்தடத்தை ஏற்படுத்தவும் கூடும்.  அந்த வழித்தடங்களை பின்பற்றி பல சிறப்புகளை நாம் நிகழ்த்தவும் கூடும். அத்தகைய வழித்தடங்கள் தானாய் நம்மை வந்தடைவதில்லை என்பது மட்டும் நிச்சயமாய் நாம் அனைவரும் அனுபவித்து அறிந்ததே.

அவ்வகையில் இந்த சிறந்த தருணத்தில் அத்தகைய சிறந்த வழித்தடத்தை பலருக்கும் ஏற்படுத்தும் பணியில் என்னால் ஆன சிறு பங்களிக்க ” உங்களுக்கு ஓர் கவிதை, உலகுக்கு ஓர் உதவி”  எனும் இந்த முயற்சியை துவங்கியுள்ளேன்.   இதற்கும் உங்களுடைய முழு ஒத்துழைப்பு கிட்டும் என்ற நம்பிக்கை எனக்குண்டு.

இதன் முக்கிய நோக்கம், உங்களின் விருப்பத்திற்கேற்ற கவிதைகளை எழுதி, அதன் வாயிலாய் நீங்களே முன் வந்து கொடுக்கும் நன்கொடையினை “வாழ்த்தி பழகுவோர் இயக்கத்தின் ”  சமூக நலப்பணிகளுக்காக பயன் படுத்துவதே ஆகும்.

இம்முயற்சியை இன்னும் எவ்வாறு சிறப்பாய் செய்ய இயலும் என்ற உங்கள் கருத்துகளை நீங்கள் எனக்கு மின்னஞ்சல் karuveli.mahendran@gmail.com  அல்லது 9445528556 என்ற எண்ணிலோ தெரிவிக்கலாம்.

இம்முயற்சி பற்றி உங்கள் நண்பர்களுடனும் / உறவினர்களுடனும் பகிர்ந்து கொள்ள விரும்பினால்

அறிமுக உரை கேட்க

Karuveli_UOK_UOU

என்றும் அன்புடன்

கருவெளி ராச.மகேந்திரன்

தேனி

உங்கள் விருப்பங்களை பகிர்ந்து கொள்ள இங்கே சொடுக்கவும்

அல்லது இந்த முகவரியை நேரடியாக பயன்படுத்தலாம்

http://goo.gl/YDvYEL

Advertisements