அன்புடையீர்,
அனைவருக்கும் சுதந்திரதின நல்வாழ்த்துகள்.  
பல மாதங்களுக்கு முன்பு இதே நாளில் வாழ்த்தி பழகுவோா் இயக்கத்தை ஒரு தொண்டு நிறுவனமாக பதிவு செய்ய தயாா்படுத்தி கொண்டிருந்தது என் மனதில் இன்றும் பசுமையாக உள்ளது.  சுதந்திரத்தின் எல்லைகள் வரையறைகள் பற்றி அறிந்து கொள்ள சமூகப்பணி எத்தனை உதவியாய் இருக்கும் என்பதனை களத்தில் இருக்கும் ஒவ்வொருவரும் அறிவா் என நம்புகிறேன்.  

image

வையகத்து அத்தனை வளங்களின் மீதும் ஒவ்வொரு உயிருக்கும் சமமான உரிமையுண்டு என்பதனை உணர்ந்து வளங்களின் மீது ஆதிக்கம் செலுத்துவதையும் அவைகளை வீணடிப்பதையும் தவிர்ப்போம். நேர்மறை சிந்தனைகள், செயல்கள் சுதந்திர மக்களின் வெளிப்பாடு என நம்புகிறேன்.  அவை இல்லாத போது அடிமை எண்ணம் இன்னும் நீங்கவில்லை என்பது சத்தியம்,  அத்தருணத்தில் உள்ளிருந்தே நமது சுதந்திர போராட்டத்தை துவங்க வேண்டும்.  அதற்கு இக்கணமே சரியானது என்று துவங்குவோம்..
அனைவரின் உள்ளமும் சுதந்திரமாக எனது வாழ்த்துகள்.  

ரா. மகேந்திரன்
நிறுவனா்
வாழ்த்தி பழகுவோர் இயக்கம்
(வாழ்த்துவோம் -பழகுவோம் – செயலாக்குவோம்)

Advertisements