ஈரோடு: தமிழ்நாடு திறன் மேம்பாட்டு இயக்கம், மாவட்ட வேலை வாய்ப்பு அலுவலகம் இணைந்து தனியார் துறை வேலை வாய்ப்பு முகாம் வரும் 11ம் தேதி காலை 10 மணிக்கு ஈரோடு மாவட்ட வேலை வாய்ப்பு அலுவலகத்தில் நடக்கிறது.

முன்னணி தனியார் நிறுவனங்கள் பங்கேற்று ஆட்களை தேர்வு செய்ய உள்ளனர். முகாமில் எஸ்.எஸ்.எல்.ஸி. தேர்ச்சி அல்லது தோல்வி, ஆசிரியர், ஐ.டி.ஐ. பிட்டர், டர்னர், மோட்டார் மெக்கானிக் உள்ளிட்ட அனைத்து பிரிவுகள், இலகு ரக வாகன ஓட்டுனர்கள், டிப்ளமோ படித்தவர்கள், கம்ப்யூட்டர் ஆப்ரேட்டர்கள் மற்றும் பட்ட படிப்பு முடித்தவர்களுக்கு பல்வேறு காலி பணியிடங்களுக்கான நேர்முக தேர்வு நடக்கிறது.

தனியார் துறையில் இம்முகாம் மூலம் பணி அமர்த்தம் செய்யப்படுவதால் தங்களது வேலை வாய்ப்பு பதிவு எண் ரத்து செய்யப்பட மாட்டாது.

எனவே மாவட்டத்தை சேர்ந்த படித்த இளைஞர்கள் மற்றும் வேலையளிப்போர்கள் வாய்ப்பினை பயன்படுத்தி கொள்ள வேண்டும் என அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

Thanks to Thangesh Panneer Selvan

Advertisements